எரிபொருள் விலையில் இன்று திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதோடு புதிய விலை இன்று திங்கட்கிழமை பிற்பகல் அறிவிக்கப்படவுள்ளது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பீப்பாய் ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 103.2 டொலர் ஆகவும், WTI கச்சா எண்ணெய் பரல் விலை 97.50 டொலராகவும் பதிவாகியுள்ளது.
மேலும், எதிர்வரும் 5ஆம் திகதி முதல் சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதனை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவித்துள்ளார்.