(அஷ்ரப் ஏ சமத்)

 இலங்கையில் பிஸ்கட், சொக்லேட், ஐஸ்கிரீம், இனிப்புப் பண்டங்கள் உற்பத்தி கம்பனிகள் (மெலிபன், எட்னா ,எலிபன்ட், உஸ்வத்த, லிட்டில் லயன் உஸ்வத்த போன்ற கம்பனியாளா்கள்) இணைந்துள்ள  இச் சங்கத்தினால் நேற்று (15) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஊடகவியலாளா் மாநாடு ஒன்று நடாத்தப்பட்டது.

இம் மாநாட்டின் போது  லிட்டில் லயன் கம்பனியின் பிரதான நிறைவேற்று அதிகாரி எஸ்.எம்.டி.சூரியகுமார இச் சங்கத்தின் தலைவராக கடமையாற்றுகின்றாா். அவரின்  தலைமையில் இச் ஊடக மாநாடு நடைபெற்றது. 

இம் மாநாட்டில் இச் சங்கத்தின்  நிறைவேற்றுக்குழு உறுபபினா் சானாஸ் ரவுப் ஹக்கீம் கலந்து கொண்டிருந்தாா்.

இந் நாட்டில் பிஸ்கட், இனிப்பு, கேக் உற்பத்தியாளா்கள் நிறுவனங்களில் நேரடியாக  5 இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு நாம் தொழில் வழங்கியுள்ளோம். எமது உற்பத்தியான பிஸ்கட் கேக் அதிக விலையானாலும் பங்களதேஸ், இந்தியா, இந்தோனிசியா . மலேசியா நாடுகள் எமது பிஸ்கட் சுவையை கவா்ந்துள்ளனா். அவா்களது நாட்டு உற்பத்தி பிஸ்கட்டை விட எங்களது உற்பத்தியையும் வாங்குகின்றனா் அவா்களது பிஸ்கட் எங்களது பிஸ்கட்டை விட விலை குறைவு .   ஆனால் அந்த மக்கள் விலை கொடுத்து எமது பிஸ்கட்டினை வாங்குகின்றனா்.

திடீரென பிஸ்கட் உற்பத்திகள் விலை ஏற்றுவதற்கான முதன்மை காரணம்  இலங்கையில் டொலர் பெருமானம் கூடியது. 4 மாதங்களுக்கு முன் சீனி 100 ருபாய்  தற்பொழுது ஒரு கிலோ சீனி 320 , ஒரு முட்டை 60 ருபா, கோதுமை மா விலையேற்றம், டீசல் பெற்றோல் விலை ஏற்றம், மின்சாரம் துண்டிப்பு எரிபொருள் இல்லாமை அத்துடன் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு வங்கிகள் எல்.சி முறை இல்லாமை யாகும் பிஸ்கட்டுகளை கொண்டு செல்லும் லோறிகள் வேன்களுக்கு டீசல் இல்லாமை, டீசல் விலை ஏற்றம். 

இதற்காக சில சமூக ஊடகங்கள் 5000 ஆயிரம் டொலா் சமூக ஊடகங்களி்ல் விளம்பரத்திற்காக செலுத்தி  எமது நாட்டு பிஸ்கட் கம்பனிகளை விலையேற்றம் என எங்களுக்கு சேறு பூசுகின்றனா்.இந்த சமூக சேவை விளம்பரத்தினால் எங்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இவா்கள் எங்களது கம்பனிகளை மூட வைத்துவிட்டு வேறு நாட்டின் பிஸ்கட் கம்பனிகளை இலங்கைக்குள் கொண்டு வரு முயற்சிக்கின்றாா்களா ? இவா்களது நோக்கம் என்ன வென்று  எங்களுக்கு தெரியவில்லை.

 எங்களது கம்பனிகளை மூட வைப்பதற்கான நோக்கமோ தெரியாது. இந்த உற்பத்தியில் உள்ளுரர் முதலிட்டாளா்கள் மட்டுமே இத்துறையை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்  திறம்பிட செயல் படுத்தி வருகின்றோம். இவா்கள் வெளிநாட்டு பிஸ்கட்டுகளை இங்கு கொண்டு வர நினைக்கிற்றாா்களோ தெரியாது.

கடந்த 4 மாதங்களுக்குள் 277 வீதம் கோதுமை மா 77 இருந்து 290 ருபா வரை விலை ஏற்றம். கோதுமை மா உள்ளுர் உற்பத்தி  அல்ல. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது  சீனி 114 இலிருந்து 320 ருபா வரை விலை அதிகரிப்பு மரக்கரி 195 ருபாவில் இருந்து 475 வரை மீண்டும் 1410 ருபா வரை  விலை அதிகரிப்பு, 

ஆனால் பிஸ்கட் 100 ருபாவில் இருந்து 271 ருபாவுக்கு மட்டுமே விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.  நாங்கள் 50 நாடுகளுக்கு எங்களது பிஸ்கட் ஏற்றுமதி செய்து இந்த நாட்டுக்கு வருடாந்தம் 150 மில்லியன் டொலரை கொண்டு வருகின்றோம்.  எங்களது பிஸ்கட் கம்பனியில் தற்பொழுது கூட 50 ஆயிரம் பேர் தொழிலை இழந்துள்ளனா். எங்களது உற்பத்தியில் 30 வீதமான 150,000 சில்லரைக் கடைகளாகும். நாங்கள் அரசுக்கு பெருந்தொகையான வரியையும் செலுத்துகின்றோம் .

 அரசாங்கம்  மேலும் சில நாடுகளின் துாதுவா்களை அனுகி இத்துறையை மேலும் மேம்படுத்தி உலக நாடுகளில் ஏற்றுமதி அதிகரிக்க உதவ முன்வருதல் வேண்டும். எனவும் பிஸ்கட் சொக்லேட் ஜஸ்கிரிம் இனிப்புப்பண்டங்கள் உற்பத்தியாளா்கள் அங்கு கருத்து தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.