மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் சவூதி அரேபியாவின் நிவாரண நிலைய மேற்பார்வையாளர் நாயகம், டொக்டர் அப்துல்லா அல்ரபீஹ் சவூதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டுடன் கலந்துரையாடினார்.

இலங்கைக்கு மருத்துவ மமற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கல், மேலும் சுனாமியால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட மக்களுக்கு சவூதி அரேபியாவினால் அமைத்துக் கொடுக்கப்பட்டு, இதுவரை பயனாளிகளுக்கு கையளிக்கப்படாது சேதமடைந்து போன வீடுகளை புனர்நிர்மாணம் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவது தொடர்பிலும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.