500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பெறுமதியான இரண்டு காற்றாலை மின் திட்டங்களுக்கு அதானி கிரீன் எனர்ஜிக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய மன்னாரில் 286 மெகாவோட் மற்றும் பூநகரியில் 234 மெகாவோட் காற்றாலை மின் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.