ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரான நந்துன் சிந்தக எனும் ஹரக் கட்டாவின் பிரதான துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

ப்ரபோத குமார என்ற ´கதிரா´ என்ற குறித்த நபர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் பொரலஸ்கமுவ பகுதியில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர் "ஹரக் கட்டா" என்ற நந்துன் சிந்தக இந்த வாரம் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்குத் தேவையான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் அரச புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த ஹரக் கட்டா என்ற நந்துன் சிந்தகா அண்மையில் துபாயில் கைது செய்யப்பட்டார்.

மலேசியா செல்ல முயன்ற போது அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன்போது, மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.

போதைப்பொருள் கடத்தல் மட்டுமின்றி, நந்துன் சிந்தக பல கொலைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.