தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் சில அதிகாரிகளுக்கு பதவி சார்ந்த சலுகைகளுக்கு மேலதிகமான சில சலுகைகள்.

* வாடகை அடிப்படையின் கீழ் சொகுசு வாகனங்கள்.

* மாதம் இரண்டு லட்சம் ரூபாய் வாடகை.

* சுற்றறிக்கைகள் தவிர, 145 லீட்டர் டீசலும் வழங்கப்பட்டுள்ளது.

* உதவித்தொகை ரூ.65,000

* தலைவரின் ஆலோசனையின் பேரில் பதவிக்கு சம்பந்தமில்லாத அனைத்து சலுகைகளும் நீக்கப்படும்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மேல்மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரை பரவியுள்ள ஊழலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.

சில அதிகாரிகளுக்கு அரசியல் செய்வதற்காக வழங்கப்பட்ட பல சலுகைகளை தாம் நீக்கியதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே சில தொழிற்சங்கங்களும் குழுக்களும் தமக்கு எதிராக பல்வேறு அவதூறு தாக்குதல்களையும் சதிகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் சில உத்தியோகத்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பெறப்பட்ட கெப் வண்டிகள் வழங்கப்பட்டதாகவும் ஒவ்வொரு வண்டிக்கும் மாதாந்தம் 02 இலட்சம் ரூபாவை அதிகார சபையால் செலுத்த வேண்டியிருந்ததாகவும் இதற்கு மேலதிகமாக 245 லீட்டர் டீசலும் வழங்கப்பட வேண்டி இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 சுட்டிக்காட்டினார்.

அவர்கள் முழுமையாக அரசியல் நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டவர்கள்  என்றும் அவர்களால் அதிகார சபைக்கு  எந்த சேவையும் நடக்கவில்லை  என்றும் தெரிவித்த தலைவர் ரஜீவ் சீரியாராச்சி தாம் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் உடனடியாக அந்த சலுகைகள் அனைத்தையும் அகற்றி அவர்களுடைய பதவிகளுக்குரிய சலுகைகளை மட்டும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை (19) தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர்களுக்கான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி இதனைக் குறிப்பிட்டார். கண்டி ரஜபிஹில்ல ஒக்ரே மண்டபத்தில் இந்த செயலமர்வு நடைபெற்றது. 

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வீட்டுக்கடனாக வழங்கப்பட்ட 10 பில்லியன் ரூபா நிலுவைத் தொகையை பெற்றுக்கொள்வதற்கான இலக்கு வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்காக இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசாங்க சுற்றறிக்கைகளை மீறி குறித்த தினத்தில் விருந்து ஒன்று நடைபெற்றதாக சில ஊடகங்கள் இந்த செயலமர்வை தெரிவித்திருந்தன. அதற்குப் பதிலளித்த தலைவர் அரசாங்கப் பணத்தைப் பயன்படுத்தி விருந்துகள் செய்யுமளவிற்கு தாம் பொருளாதார ரீதியாக நலிவுற்ற ஒருவர் அல்ல என்று  தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த தலைவர் ரஜீவ் சூரியாராச்சி,

“இன்று, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பெரியவர்கள் சிலர் கண்டியில் ஹோட்டல் ஒன்றில் விருந்துபசாரத்தில் இருக்கிறார்கள் என்று நாட்டின் ஊடகங்கள் இந்தச் செயலமர்வுக்கு அதிக விளம்பரம் கொடுத்துள்ளன. முதல் விஷயம் என்னவென்றால், நீங்கள் அனைவரும் இந்த விருந்துக்கு உற்சாகமாக வந்தீர்களா என்று நான் கேட்க விரும்புகிறேன். இந்த தவறான தகவலை ஊடகங்களுக்கு யார் கொடுப்பது? ஒரு வேலையைச் சரியாகச் செய்ய அனுமதிக்காவிட்டால் நாம் எடுக்க வேண்டிய அடுத்த கட்டம் என்ன?

நான் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக வந்த போது இந்த நிறுவனத்தில் சில அரசியல் பதவிகள் இருந்தன. அரசியல் செய்ய அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சில பதவிகள் அவை. அந்த பதவிகளின் அனைத்து சலுகைகளையும் நீக்கிவிட்டேன். அவர்களை நான் கண்டது கூட இல்லை. அவர்கள் மீது எனக்கு கோபம் இல்லை.  அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த கெப் வண்டிக்கு வாடகை மாதாந்தம் இரண்டு இலட்சம் ரூபாய் செலுத்தப்பட்டது. 145 லீட்டர் டீசல் வழங்கப்பட்டது.    65,000 ரூபா பணமும் கொடுக்கப்பட்டது. இது போன்ற வேலைகள் நடக்கும் போது  ஊடகங்களுக்கு தகவல் கொடுத்தவர்கள் எங்கே இருந்தார்கள்?  தூங்கிக் கொண்டிருநதார்களா?  இந்த அனைத்து சலுகைகளையும் அகற்றிய பின்னர் தான் இவ்வாறான சதிகள்  தொடங்குகின்றன.

 அப்பாவி மக்களுக்கு சேவை ஆற்றும் கடமை இந்த நிறுவனத்திற்கு இருக்கிறது.  எனினும், கடந்த காலங்களில் அது திருடர்களின் குகையாக மாறிவிட்டது. இந்த நிறுவனத்தில்  மேல்மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரை ஊழலுக்கு ஆளாகியுள்ளது. மக்களின் வீட்டுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, சில முக்கியஸ்தர்கள் தமக்குக் கிடைக்காத சலுகைகளைப் பெறுவதற்கு வேலை செய்து கொண்டிருந்தார்கள். அந்த அனைத்து ஊழல் மோசடிகளையும் தடுத்து நிறுத்தி, இந்த நிறுவனத்தை அதன் உண்மையான இலக்குகளை நோக்கி  செயல்படும் நிறுவனமாக மாற்றி இருக்கின்றோம்.

நான் வந்த பிறகு, பொது முகாமையாளர் மற்றும் அனைத்து பிரதி பொது மேலாளர்களுடன் பல சந்திப்புகள் நடத்தப்பட்டன. அந்த ஒவ்வொரு கூட்டத்திலும், ஊழியர்களுக்கு எதிர்கால சம்பள நிலவரத்தை நினைவூட்டினேன். எங்களிடம் 100 மில்லியன் உள்ளது. கடந்த மாதம் சம்பளம் கொடுக்க 107 மில்லியன் தேவைப்பட்டது. கடந்த மாதம் 153 மில்லியன் பணமாக்கப்பட்டது. மார்ச் மாதத்தில்  சுமார் 308 மில்லியனுக்கு சென்றுள்ளது. அப்போதும் இந்த நாட்டில் நெருக்கடி ஏற்பட்டது. பிப்ரவரியில் 284 மில்லியன் வசூல் செய்யப்பட்டது. அரகல போராட்டத்தின் போதே நான் தலைவராக பொறுப்பேற்றேன். கடனை மீள அறவிடுவதில்  பெரும் சரிவை சந்தித்துள்ளோம்.

 மார்ச் மாதத்தில் கட்டணங்கள் அறவிடப்பட்டது போன்று அறவிடப்படுவதைத் தொடர்ந்து கொண்டு போவதற்காகவே இந்த செயலமர்வு  நடத்தப்பட்டது. ஊடகங்களில் சொல்லப்பட்ட வகையிலான  விருந்து ஒன்று அல்ல. விருந்து போடுவதற்கு  நான் ஒரு பிச்சைக்காரன் அல்ல, அதை எனக்கு வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.  நிறுவனத்தில் உள்ள  அனைவருக்கும் இலவச போக்குவரத்து வசதி செய்து  மற்றும் எனது வீட்டில் இலவச விருந்து அளிக்கும் திறன் என்னிடம் உள்ளது. அதிகாரியிடம் இருந்து ஒரு இலை கூட பெற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என் பணத்தில் ஹில்டனில் விருந்து கொடுக்க வேண்டுமானால் அதையும் செய்வேன்.

அதிகாரசபைக்கு சொந்தமான பெருமளவிலான காணிகள் பலவந்தமாக அபகரிக்கப்படுவதைப் பார்த்தோம். இன்று அதிகார சபைக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை. குண்டசாலை மகாவலி ஆற்றின் கரையில் உள்ள எமது காணியில் பெருமளவிலான நிலத்தை ஆக்கிரமித்ததன் மூலம்அந்த நிலங்ளில் வீடு கட்டி முடித்துள்ளனர். இறுதியாக, அந்தப் பொறுப்பு மாவட்ட முகாமையாளரிடம் வருகிறது. இந்தக் காணிகளில் ஏன் வீடுகள் கட்டும் வரை காத்திருக்கிறீர்கள்? சட்டவிரோத நிலத்தை முறைப்படுத்த அடுத்த கோப்புகள் வருகின்றன. எங்கள் நிலங்கள் அனைத்தும் அப்படித்தான் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த நிலத்தை வாங்க முடியுமா? ஒன்றும் செய்ய முடியாது. அவர்களைப் பார்த்தால், அந்த மக்கள் மிகவும் அப்பாவி மக்கள். அந்த மக்களின் வீடுகளை அழித்துவிட்டு அந்த நிலங்களை எடுக்க முடியாது. நல்லிதயம்  கொண்ட மக்களாக நாம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். நாடளாவிய ரீதியில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானஜ் காணிகளை பாதுகாப்பது அனைத்து மாவட்ட முகாமையாளர்களினதும் பொறுப்பாகும்".

கருத்து தெரிவித்த தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் திரு.கே.ஏ.ஜனக,

"2015-2019 காலப்பகுதியில், வீடமைப்பு அதிகார சபை இலங்கையில் நிறைய கடன்களையும் உதவிகளையும் வழங்கிய ஒரு நிறுவனமாகும். ஒரு வருடத்திற்கான இலக்கு பில்லியன்கள் கணக்கில் இருந்தது. அந்த பணம் போதாத நிலையில், வீடமைப்பு அதிகார சபையின் அனைத்து சொத்துக்களையும்  விற்று, நிறுவனத்தின் நிரந்தர வைப்புத் தொகையைப் பயன்படுத்தி கடன் வழங்கப்பட்டது. டார்லி வீதியில் உள்ள ஒரு நிலத்தில் இருந்து 700 மில்லியனை எடுத்து கடனாக கொடுத்தது நினைவிருக்கலாம். ஆனால் முதல் மற்றும் இரண்டாம் தவணை மட்டுமே வழங்கப்பட்டது. நிறுவனம் பணம் கொடுத்து நிலத்தை கொள்வனவு செய்து  இலவசமாக  விநியோகித்தது.

2019 ஆம் ஆண்டின் இறுதியில், ஜனவரி 1, 2020 நிலவரப்படி, வீடமைப்பு  அதிகார சபையால்நாட்டு மக்களுக்கு 26 பில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளது. அது தான் உண்மை. அதை நிரூபிக்க எங்களிடம் ஆதாரம் உள்ளது. கடன் மீள அறவிடுதலும் அதிகமாக இருக்க வேண்டும். கடன் கொடுக்கும்போது கட்டணம் இருக்க வேண்டும். ஆனால் கடன் வசூலிக்கும் போது 65% ஆக இருந்தது. அந்த நேரத்தில், தனிப்பட்ட கடன் தொகையை அதிகரிக்க மட்டுமே உள்ளது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மாவட்ட அலுவலகங்கள் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகைகள், மீளப்பெற வேண்டிய தொகைகள் மற்றும் இது முடிவடைவதற்கு முன்னர் மாதாந்தம் 300 மில்லியன் ரூபாவை மீள அறவிடுதலுக்கான முறையொன்றை தயாரித்தல் தொடர்பான தகவல்களை மாவட்ட முகாமையாளர்கள் சமர்ப்பித்தும்  இங்கு கலந்துரையாடப்பட்டது.

முனீரா அபூபக்கர்

2022.08.21

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.