இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன செயற்பாடுகள் குறித்து விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு டெர்மினல்ஸ் லிமிடெட் ஆகியவற்றின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை ஒன்றை நடத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எரிபொருள் கொள்வனவு டெண்டர் நடைமுறை, டெண்டர் மதிப்பீடு, முறையற்ற order, விநியோகஸ்தர்களை தேர்வு செய்யும் முறை, பணம் செலுத்துவதில் தாமதம், விநியோகத்தில் உள்ள சிக்கல்கள், மேற்கூறிய விடயங்கள் தொடர்பாக பல்வேறு நபர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு அமைச்சர் தனது முறைப்பாட்டில் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.