நுகர்வோர் விவகார அதிகார சபை கடந்த 19 ஆம் திகதி நள்ளிரவு முதல் முட்டை விலையினை நிர்ணயம் செய்து வர்த்தமானி ஒன்றினை வெளிட்டிருந்தது.

இதற்கமைய வெள்ளை முட்டை ஒன்றின் விலையை 43 ரூபாவாவும் சிவப்பு முட்டை ஒன்றின் விலையை 45 ரூபாவாகவும் நிர்ணயம் செய்து வெளியிட்டிருந்த போதிலும், மலையகப் பகுதியில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை, ஹட்டன், தலவாக்கலை உள்ளிட்ட பகுதிகளில் 60 ரூபா முதல் 65 ரூபா வரை விற்பனை செய்து வருவதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்த நாட்டில் பொதுமக்கள் நலன் கருதி வெளியிடப்படும் எந்த ஒரு சட்டமும் அல்லது அறிவுறுத்தல்களும் எந்த வர்த்தகரும் பின்பற்றுவதில்லை எனவும் இதற்கு எதிராக நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளோ பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்களோ நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களுக்கு விலை அதிகரிக்கும் போது, வர்த்தகர்கள் உடன் விலையை அதிகரிப்பதாகவும் விலை குறையும் போது விலை குறைப்பு இடம்பெறுவதில்லை எனவும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நாட்டு மக்கள் பொருளாதார வீழ்ச்சி காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் வர்த்தக சமூகம் இவ்வாறு பொதுமக்களிடம் இருந்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் நடந்து கொள்வது மிகவும் மோசமான நிலை எனவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.