புலம்பெயர்ந்து வாழும் மக்களின் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் குறித்து ஆராய்வதற்கும், அவர்களுடன் நேரடி தொடர்புகளைப் பேணுவதற்கும் இலங்கையில் புலம்பெயர் அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு, சினமன் லேக்சைட் ஹோட்டலில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ‘தொழில்சார் வல்லுநர் சங்கங்களின் மாநாடு – 2022’ விருது வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வதில் புலம்பெயர் மக்களும் ஒரு பலமாக உள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.