(ஹஸ்பர்)

சர்வதேச உணவுத் திட்டத்தின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையினை கருத்திற் கொண்டு மக்களுக்கான நிதி உதவி வழங்கல் தொடர்பான கலந்துரையாடல் தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இன்று (29) இடம்பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலானது 25 மாவட்டங்களிலும் இத் திட்டம் நடை முறைப்படுத்தப்படவுள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் மொரவௌ, சேருவில, தம்பலகாமம், வெருகல் ஆகிய நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இத் திட்டத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு தலா 15000 ரூபா பணம் வெஸ்டன் யூனியன் சேவை ஊடாக வழங்கப்படவுள்ளது.

இதில் கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், சமுர்த்திப் பயனாளிகள், விசேட தேவையுடையோர்கள் போன்ற குழுக்களை வைத்து உள்ளடக்கப்பட்ட நிலையில் பயனாளிகள் இதன் ஊடாக பயன் பெறவுள்ளனர்.

குறித்த கொடுப்பனவானது ஆகஸ்ட், செப்டெம்பர், ஒக்டோபர் மூன்று மாத காலத்துக்கு முதற் கட்டமாக  வழங்கப்படவுள்ளது.

இதில் தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் 2432 பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளன.

இக் குறித்த கலந்துரையாடலில் சர்வதேச உணவு திட்டத்தின்   (WFP) திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பத்மரஞ்சனி கேதீஸ்வரன், உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சித்திக், பிரதம முகாமைத்துவ உதவியாளர் நிகாத் உட்பட வெளிக்கள உத்தியோகத்தர்கள், பொது மருத்துவ மாதுக்கள் என பலர் கலந்து கொண்டனர்.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.