கொழும்பில் நேற்று (18) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் 16 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்று கொழும்பில்  நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கைதான 19 பேர் இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அதன்போது, 16 பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 3 பேரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.