அடுத்த சில நாட்களில் மற்றொரு டீசல் கப்பல் நாட்டை வந்தடைய உள்ளது.

30,000 மெற்றிக் தொன் டீசல் கப்பலொன்று இவ்வாறு இலங்கைக்கு வரவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், நேற்று முன்தினம்(13) இரவு நாட்டை வந்தடைந்த கச்சா எண்ணெய் கப்பலின் மாதிரி பரிசோதனை நேற்று(14) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாதிரிகளை பரிசோதித்த பிறகு, கப்பலில் எரிபொருள் இறக்கும் பணி ஆரம்பிக்கப்படும்.

கச்சா எண்ணெய் இறக்கப்பட்டதன் பின்னர், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளும் ஆரம்பிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.