எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காகவே சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைவதற்கு சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைந்து, அமைச்சு பதவிகளை ஏற்கப்போவதில்லை என சஜித் பிரேமதாச விடுத்துள்ள அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

சர்வக்கட்சி அரசாங்கம் அமைக்குமாறு பல தரப்பினரும் கோரிக்கை விடுக்கின்றனர். இது தொடர்பில் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், எதிர்க்கட்சித் தலைவர், இந்த விவகாரத்திலும் அரசியலே நடத்துகின்றார். தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்க வைக்கவே, சர்வக்கட்சி அரசாங்கத்தை எதிர்க்கின்றார். சஜித்துக்கு நாடு பற்றி கவலை இல்லை.' எனவும் மஹிந்த அமரவீர மேலும் குறிப்பிட்டார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.