(ஹஸ்பர்)

சமூக ஒன்றிணைவு குறித்து பெண்கள் மற்றும் இளைஞர்களை வலுப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் திருகோணமலை மாவட்டத்தில் இவ்வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதனடிப்படையில் குறித்த வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு (30) திருகோணமலை ஜெகோப் பீச் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம கலந்து சிறப்பித்தார்.


நாடு தற்போது பொருளாதார ரீதியாக நெருக்கடிகளினை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் திருகோணமலை மாவட்டத்தில் மக்களது ஜீவனோக செயற்பாட்டை வலுப்படுத்த சில உதவிகளினை வழங்கி வருகின்றார்கள். இவ்வேலைத்திட்டத்தில் மிக கஸ்;டமான பிரதேசங்களும் உள்ளடக்கப்பட்டமை வரவேற்கத்தக்கது. இவ்வேலைத்திட்டத்தினை சிறப்பாக நடைமுறைப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.

இவ்வேலைத்திட்டத்தை திருகோணமலை மாவட்டத்தில் சிறுவர் அபிவிருத்தி நிறுவனம் செயற்படுத்தவுள்ளது. ஆசிய மன்றம் இதற்கான நிதியுதவியை வழங்குகின்றது. இவ்வேலைத்திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படும். செயற்றிட்ட காலப்பகுதி ஒரு வருடமாகும். மொரவௌ, குச்சவெளி, கோமரங்கடவெல மற்றும் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகங்களின் தெரிவு செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படும். இச்செயற்றிட்டத்திற்காக 10.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இந்நிகழ்வில் சிறுவர் அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஆர். அரியரத்தினம், குச்சவெளி பிரதேச செயலாளர் கே.குணநாதன், திருகோணமலை பட்டினமும் சூழலும் மற்றும் கோமரங்கடவெல உதவி பிரதேச செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.