விநியோக குறைபாடுகள் சரி செய்யப்பட்டு, கடந்த 4 நாட்களில் அதிக எரிபொருள் பங்குகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன சேமிப்பு முனையம் நாளாந்தம் 4000 மெற்றிக் தொன் டீசலையும் 3000 மெற்றிக் தொன் பெற்றோலையும் தொடர்ந்து விநியோகிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், 35,000 மெற்றிக் தொன் 92 ரக பெற்றோல் இன்றையதினம் இரவு, கப்பலில் இருந்து தரையிறக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருள் வாங்கும் போது காசோலைகள் மூலம் பணம் செலுத்தும் முறைமை நிறுத்தப்பட்டதன் மூலம் எரிபொருள் ஓடர்கள் குறைந்துள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.குமார ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பௌசர் வாகனங்களை இயக்குவதற்கு தேவையான எண்ணெயை பெற்றுக்கொள்வதற்கான முறையான முறைமை இன்னும் தயாரிக்கப்படவில்லை என இலங்கை பெற்றோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்றும் கொழும்பை சுற்றியுள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வரிசைகள் காணப்பட்டதுடன் பல சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் இன்றி மூடப்பட்டிருந்தன குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.