கத்தார் ஸ்கை தமிழ் நடாத்திய பாடசாலை மாணவர்களுக்கான ஊடக செயலமர்வு
பலாங்கொடை ஜெய்லானி தேசிய பாடசாலையில் 31.08.2022 இன்று பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஸ்கை தமிழ் ஊடகம் மற்றும் துணிதெழு சஞ்சிகையினால் இன்றைய தினம் பலாங்கொடை பிரதேசத்தில் காணப்படும் ஜெய்லானி தேசிய பாடசாலையில் இலவச ஊடக செயலமர்வு நடத்தப்பட்டது.

இச் செயலமர்வில்  தரம் 6 முதல் 11 வரையான பாடசாலை ஊடகப் பிரிவை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வானது பாடசாலையின் அதிபர்    
எம். ஜெ. எம்  மன்சூர் அவர்களது தலைமையில் பாடசாலை ஊடகப் பிரிவின் பொறுப்பாசிரியர் ஆர் மனோகரன் அவர்களது கண்காணிப்பின் கீழ் இடம்பெற்றது.
இந்த இலவச ஊடக செயலமர்வு ஸ்கை தமிழ் ஊடகத்தின் பிராந்திய ஒருங்கிணைப்பாளரும்  துணிந்தெழு சஞ்சிகையின் இணை ஆசிரியருமான ஷிஹானா நௌபர் இனால் நடாத்தி வைக்கப்பட்டது..

செயலமர்விற்கு தேவையான உதவிகளை துணிந்தெழு சஞ்சிகையின் ஆசிரியர் குழு உறுப்பினர் சிவபாலன் கற்பஹாசினி வழங்கியிருந்தார். 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட இந்த ஊடக செயலமர்வில் ஊடகத்தைப் பற்றிய ஒரு அழகான விளக்கத்தை ஸ்கை தமிழ் ஊடகத்தை  பற்றிய அறிமுகத்தையும் அவர் மாணவர்களுக்கு வழங்கி இருந்தார். இன்றைய தினம் நடந்த ஊடக செயலமர்வின் போது பாடசாலை ஊடக பிரிவானது ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் ஸ்கை பாடசாலை உடன் இணைத்துக் கொள்ளப்பட்டது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.