(ஹஸ்பர்)
முஸ்லிம் எயிட் நிறுவனம் முன்மாதிரி கிராம அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக திருகோணமலை கல்வி வலயத்துக்குட்பட்ட புல்மோட்டை 04ஆம் வட்டார மாணவர்களின் கல்வி வளர்ச்சியினை அபிவிருத்தி செய்வதற்கான முதற்கட்ட வேலைத்திட்டமாக தரம் 03, 04 ,05 ஆகிய மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளை உத்தியோகபுர்வமாக நடாத்தும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில், முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் ஏ.சி. பைசர்கான் மற்றும் திட்ட முகாமையாளர் பஸ்லான் தாசீம், திருகோணமலை மாவட்ட இணைப்பளர் சலீம், திட்ட அதிகாரி முகம்மட் அஸ்வர் பாடசலை அதிபர் மற்றும் அசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.