நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுகாதார திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த 4 மாதங்களுடன் ஒப்பிடும் போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் மாத்திரம் 129 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கடந்த 15 ஆம் திகதி 3 கொரோனா தொற்றாளர்கள் மரணித்துள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 68 ஆயிரத்து 141 ஆக அதிகரித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.