படப்பிடிப்பு ஒன்றுக்காக இலங்கை வந்துள்ள மலையாள நட்சத்திர திரைப்பட நடிகர் மம்முட்டியை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சனத் ஜயசூரிய சந்தித்துள்ளார்.
இது தொடர்பில் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ஜயசூரிய, மூத்த மலையாள நடிகர் மம்முக்காவை சந்தித்ததனை நான் கௌரவமாக கருதுகிறேன். நீங்கள் ஒரு உண்மையான சூப்பர் ஸ்டார். இலங்கைக்கு வருகை தந்தமைக்கு நன்றிகள். நான் அனைத்து இந்திய நட்சத்திரங்கள் மற்றும் நண்பர்களை இலங்கைக்கு வருமாறும் சுகம் அனுபவிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சனத் ஜயசூரிய அண்மையில் இலங்கையின் சுற்றுலா தூதுவராக நியமிக்கப்பட்டார்.
மம்முட்டி "கடுகண்ணாவ ஒரு யாத்ரா" என்ற நெட்பிலிக்ஸ் படத்தில் நடிப்பதற்காக இலங்கை வந்திருப்பதுடன், காட்சிகள் கடுகண்ணாவ மற்றும் கொழும்பு உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.