சிங்கப்பூரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் தேர்வுக்கு முன்னர் மாணவர்களின் பெற்றோர்களுக்கு இப்படி ஒரு கடிதம் அனுப்பப்படுகின்றது:

அன்பான பெற்றோர்களே, பாதுகாவலர்களே!

உங்கள் குழந்தைகளுக்கான தேர்வுகள் தொடங்கவுள்ளன, உங்கள் குழந்தைகளின் செயல்திறனைப் பற்றி நீங்கள் மிகவும் கவலைப்படுகிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள்.

👉 இந்த தேர்வு எழுதும் மாணவர்களில் ஒரு கலைஞன் இருப்பான், அவன் கணித பாடத்தில் தேர்ச்சி பெற்றவனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. 

👉 இதில் ஒரு தொழிலதிபர் இருப்பான், அவன் வரலாறு பாடத்தில் தேர்ச்சி பெற்றவனாக இருக்க வேண்டிய அவசியமில்லை

👉 இதில் ஒரு இசைக்கலைஞன் இருப்பான், அவன் வேதியல் பாடத்தில் சிறந்து விளங்க வேண்டிய அவசியமில்லை.

👉 இதில் ஒரு உடற்பயிற்சி ஆசிரியர் இருப்பான், அவன் இயற்பியல் பாடத்தில் பெரிய மதிப்பெண்கள் எடுத்து எதுவும் ஆவப்போவதால்லை.

❤ உங்கள் மகன் அனைத்து பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றால், அது பாராட்டத்தக்க விவேகம்தான்.

❤ ஆனால், அவன் எடுக்காத பட்சத்தில், அவனை ஏளனமாக பார்க்காதீர்கள்! அவன் தன்னம்பிக்கையை, கண்ணியத்தை இழக்கச் செய்யாதீர்கள்!

❤ அவர்களை அமைதிப்படுத்துங்கள், இது ஒரு சிறிய பரீட்சைதான். வாழ்க்கையில் இன்னும் முக்கியமான விஷயங்கள் உள்ளன என்று அவர்களுக்கு விளக்குங்கள்!

❤ அவர்கள் என்ன மதிப்பெண்கள் எடுத்தாலும் நீங்கள் அவர்களை நேசிக்கிறீர்கள் என்று அவர்களிடம் சொல்லுங்கள், நீங்கள் ஒருபோதும் அவர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். 

❤ தயவு செய்து இப்படி செய்து பாருங்கள்!உங்கள் பிள்ளைகள் எப்படி வெற்றி பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்!

❤ ஒரு பரீட்சையால், அல்லது குறைந்த ஒரு மதிப்பெண்ணால் அவர்களின் கனவுகள் தவிடுபொடியாகாது. அவர்களின் எதிர்காலம் வீணாகாது!

❤ தயவு செய்து, பொறியாளர்களும், மருத்துவர்களும் தான் இந்த பூமியில் மிகவும் மனமகிழ்ச்சியான மனிதர்கள் என்ற உங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுங்கள்!

முற்றும்...!

👉 மேம்பட்ட சமூகங்கள் எப்படியெல்லாம் தங்கள் வளரும் தலைமுறையை ஊக்குவிக்கிறார்கள் என்று நாம் கற்றுக்கொள்வோம்!

👉 ஆற்றல்மிக்க அந்த ஆண்டவன் ஒவ்வொரு ஆன்மாவையும் படைத்த போதே அது இந்த மண்ணில் நல்லதோர் பிரதிநிதியாக தலைநிமிர்ந்து வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதற்காக ஒரு ஆற்றலையும் சேர்த்துத்தான் படைத்துள்ளான் என்பதை நாம் தெரிந்துகொள்வோம்!

✍ தமிழாக்கம் / imran farook

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.