முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

மிக் ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர் முன்னிலையாகியிருந்தார்.

வாக்குமூலம் வழங்கிய பின் அங்கிருந்து வௌியேறிய அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ளார்.

சிங்கப்பூரில் தங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி கடந்த 11ஆம் திகதி தாய்லாந்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.

மனிதாபிமான அடிப்படையில் கோட்டாபய ராஜபக்ஷ  தனது நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வேறு நாட்டில் நிரந்தரமாக தஞ்சம் அடையும் வரை தற்காலிகமாக தங்கியிருக்க முடியும் எனவும் தாய்லாந்து பிரதமர் முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை மக்களின் எதிர்ப்பு காரணமாக ஜூலை 13 ஆம் திகதி மாலைதீவுக்குச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கிருந்து சிங்கப்பூருக்கும், பின்னர்  தாய்லாந்துக்கும் சென்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.