முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சிங்கப்பூரில் தங்குவதற்கு மேலும் 14 நாட்கள் அவகாசம் வழங்குமாறு இலங்கை அரசாங்கம் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு விசா காலாவதியானதையடுத்து ஆகஸ்ட் 11ஆம் திகதி நாடு திரும்புவதாக இருந்தது.

எவ்வாறாயினும், அரசாங்கத்தின் கோரிக்கையை அடுத்து அவர், இம்மாதம் இறுதி வாரம் வரை சிங்கப்பூரில் தங்கியிருப்பார் எனத் தெரிய வருகிறது.

போராட்டக்காரர்களின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்ட ஜனாதிபதி ஜூலை 14ஆம் திகதி மாலைத்தீவு வழியாக சிங்கப்பூர் சென்றார், மேலும் அவர் இரண்டு வாரங்கள் அங்கு தங்க அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.