எரிபொருள் விலை இன்று குறைக்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஒரு மாதத்திற்கு முன்னர் அறிவித்திருந்தார்.

குறித்த அறிவிப்பின் படி இந்த மாதம் 1 ஆம் திகதி எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டது.

இந்நிலையில், எரிபொருள் விலையில் இன்றும் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதோடு புதிய விலை இன்று திங்கட்கிழமை பிற்பகல் அறிவிக்கப்படலாம் என அமைச்சரின் அறிவிப்பை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.