⏩ இடைக்கால வரவு செலவுத் திட்டம் ஆறு வேலைத்திட்டங்களின் விடயங்களை அடிப்படையாக  சமர்ப்பிக்கப்பட்டது…

⏩ இது ஐசிங் தூவப்பட்ட மிட்டாய்  வரவு செலவுத் திட்டம் அல்ல…

⏩ இனி  நாட்டுக்கு அந்நிய செலாவணி கொண்டு வருவதற்கும் முதலீட்டாளர்களை வரவழைப்பதற்குமே போராட்டம் நடாத்தப்படல் வேண்டும்… 

⏩ 225 பேரும் இணைந்து செயற்பட்டால் நாட்டை மீட்டெடுக்கலாம்...

- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில், ஆறு வரவு வேலைத் திட்டங்களின் அடிப்படையில் இடைக்கால வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்ட சூழ்நிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பொருளாதார மற்றும் சமூகப் பின்னணி நாட்டில் காணப்படுகின்றதால்  வரவு செலவு திட்டத்தின் முன்மொழிவுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனையோரினதும் ஒத்துழைப்பினை எதிர்பார்ப்பதாக  நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

செலவு முகாமைத்துவ நடவடிக்கைகள், புதிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு கொள்கைகளை அறிமுகப்படுத்துதல், பொது நிறுவனங்களை மறுசீரமைத்தல், புதிய சட்டங்கள் மற்றும் சட்ட சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துதல், பணிகளை வலுப்படுத்துதல் போன்ற ஆறு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக பொது நிதி நிர்வாகத்திற்கான சட்டமன்றம்  போன்றவை  இந்த நாட்டில் எதிர்காலத்தை  தீர்மானிக்கும் என அமைச்சர் பிரசன்ன மேலும் தெரிவித்தார்.

புத்தரமுல்லை, செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு  அமைச்சில் இன்று (31) இல் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

மேலும் அமைச்சர் அவ்வேளை கூறியதாவது:   

“ மிகவும் நெருக்கடியான பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில் சாதாரண மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தாத வகையில் ஜனாதிபதி இவ்வாறான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளமையை நாம் பாராட்ட வேண்டும். பொருளாதார நெருக்கடியை சமாளித்து நாட்டை சமூக, அரசியல் ரீதியில் ஸ்திரப்படுத்த இந்த அரசாங்கத்தினால் முடியும் என நான் நம்புகிறேன். குறுகிய காலமே இது இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதால் ஜனாதிபதியின் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை வலுப்படுத்த இந்த தருணத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து, குறைந்த வருமானம் பெறுவோருக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்கும் அதே வேளையில், கல்வி, சுற்றுலா, விவசாயம், போக்குவரத்து போன்ற துறைகளை நவீன உலகிற்கு ஏற்றவாறு மேம்படுத்துவதற்குத் தேவையான முன்மொழிவுகள் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் உள்ளன. இது மிகவும் நல்ல விஷயம், எனவே நாட்டிற்கு தேவையான சாதகமான அம்சங்களை உள்ளடக்கிய வரவு செலவுத் திட்டம்  என்று இதை அழைக்கலாம். இது ஐஸிங் கொண்ட சீனி மிட்டாய்; வரவு செலவு திட்டம் அல்ல. இந்த வரவு செலவு திட்டத்தை செயல்படுத்த இரு கட்சிகளின் ஆதரவு தேவை. சவால்களை பொறுப்பேற்க பயப்படும் விமர்சகர்கள் இதற்கு குறைபாடுகள் தெரிவிப்பார்கள். ஆனாலும்; எமது பயணத்தை நாம் தொடர்வோம்.

கொரோனா தொற்றுநோய் காரணமாக, நாங்கள் நீண்ட காலமாக நாட்டை மூட வேண்டியிருந்தது, நாடு மீண்டும் திறக்கப்பட்டு வளர்ச்சிப் பணிகள் தொடங்கிய பின்னர்  நாட்டில் ஒரு போராட்டம் தொடங்கப்பட்டது.  இதனால் எங்கள் பொன்னான நேரமும் உழைப்பும் வீணாகியது.  இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

நாட்டுக்கு முதலீட்டாளர்களை வரவழைத்து அந்நிய செலாவணியை வாங்கவும், நிலையான ஆட்சியை ஏற்படுத்தவும் தான் நாம் போராட வேண்டும். நிலையான அரசு இல்லையென்றால் முதலீட்டாளர்கள் நாட்டிற்கு வரமாட்டார்கள். வீதியில் இறங்கி பதாகைகளை வைத்துக்கொண்டு சத்தமிட்டால பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியாது, அமைப்பை மாற்ற முடியாது. மக்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர்,  நாம் 225 பேரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பலாம்.  இல்லாவிட்டால் மிகவும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையாக இருக்கும்" என்று அமைச்சர் கூறினார்.


முனீரா அபூபக்கர்

2022.08.31

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.