பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்றைய (05) ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள்.

சமீபத்தில், பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஜனாதிபதி புதன்கிழமை தனது சிம்மாசன உரையை நிகழ்த்தினார். அதைப் பற்றி பேசும் போது, ​​2015 தொடக்கம் 2019 ஆம் ஆண்டுகளில் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட கொள்கை செயல்முறைகள் நினைவுக்கு வருகின்றன. அந்த உரையில், அனைவருக்கும் அமைதியின் கரங்களை நீட்டி அனைவரையும் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று ஓரிடத்தில் கூறுகிறார். நாடு கடந்த காலத்தை மறந்து புதிய கொள்கை மாற்றத்திற்குட்பட வேண்டும் எனவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த காலத்தை மறந்துவிடுங்கள், அமைதியின் கரங்களை நீட்டுவோம், புதிய பயணத்தை மேற்கொள்ள வேண்டும், புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என்று கூறி 24 மணி நேரம் கடப்பதற்குள், அன்று மாலையே, நாட்டின் தொழிற்சங்கத்தின் தலைவரும், மனித உரிமைகளுக்காக முன்நிற்கும் சர்வதேசம் அறிந்த திரு.ஜோசப் ஸ்டாலின், நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக பொலிஸால் கைது செய்யப்பட்டார். மே 28 ஆம் திகதி நடந்த சம்பவத்தையை பின்புலமாக கொண்டு இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.ஜனாதிபதியின் சிம்மாசன உரையில் அவர் கூறியதைத் தலைகீழாக மாற்றினார்.

சமாதானம் மற்றும் நல்லிணக்கம் பற்றி பேசி,கடந்த காலத்தை மறந்து இந்நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க முன்வர வேண்டும் என்று அறிவித்த அவரே,அன்றைய தினமே அதிகாரத்தை பயன்படுத்தி பொலிஸாரை அனுப்பி ஜோசப் ஸ்டாலினை கைது செய்தார். அவரது கைதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய சிம்மாசன உரையின் போது உலகமே பார்க்க வேண்டும் சர்வதேச நல்லபிப்பிராயத்தை பெறுவதற்காக சகலரினதும் ஒத்துழைப்பை பெறலாம் என்ற போக்கில் தான் ஒரு மிகச் சிறந்த ஜனநாயகவாதி என காண்பிக்க முற்பட்டார்.புதிய கலாசாரம் பற்றி பேசிய அவர் முன்னைய ராஜபக்ஸர்களின் ஆட்சியின் நீட்சியையா முன் கொண்டு செல்லப்போகிறார் என்ற ஒரு கேள்வி உள்ளது. இந்த அரசாங்கத்தின் முன்னேக்கிய பயணம், ரணில் விக்கிரமசிங்கவின் பேச்சு மற்றும் ராஜபக்சவின் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டதா என்ற கேள்வி எமக்கு உள்ளது.

ஜனாதிபதியாவதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதன் மூலம் ஜி.எஸ்.பி சலுகையை இழக்க நேரிடும் என தெரிவித்தார். இதனால் சர்வதேச ஆதரவை இழக்க நேரிடலாம் என்றார். ஆனால் இன்று அவர் ஜனாதிபதியாக வந்ததும் சர்வதேசத்தை மறந்து விட்டார். அந்தக் கதைகள் இன்று செல்லுபடியா இல்லையா என்று ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கேட்க வேண்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இதற்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவ்வாறான நிலையில்,அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் சர்வதேச ரீதியில் கிடைக்கும் ஆதரவை இழக்கும் வகையில் அரசாங்கம் வேண்டுமென்றே ஒரு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது போல. சர்வதேச ஆதரவின்றி இதற்கு தீர்வு காண முடியாது என கூறப்பட்டுள்ளதால் சர்வதேச ஆதரவு தேவையா இல்லையா என்ற பிரச்சினை உள்ளது.

போராட்டகாரர்களை பின்தொடர்ந்து கைது செய்வதால் சர்வதேச ஆதரவு கிடைக்கும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியாது. பாராளுமன்றத்தில் சகலரையும் விட அரசியல் அனுபவம் உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இது புரியவில்லையா என்று தெரியவில்லை. புரித்தும் புரியாதது போல் செயற்படுகிறாரா என்ற கேள்வியுள்ளது. ஜனாதிபதியாக இருந்தபோதிலும் முன்னைய  கோட்டாபய ராஜபக்ஸ அரசில் இருந்த கமல் குணரத்ன, டிரான் அலஸ் இன்னும் பொறுப்புகளில் இருக்கிறார்.

பொலிஸாருக்குப் பொறுப்பான பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில் ஜனாதிபதியின் உத்தரவுகளுக்கு அடிபணியாமல், ராஜபக்ஸவின் நடைமுறையை அரசாங்கத்திற்குள் நடைமுறைப்படுத்துகின்றனரா?, இந்த அரசாங்கத்தை யார் நடத்துவது என்ற கேள்வியும் இன்று எழுந்துள்ளது என தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.