திடீரென செயலிழந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் மீண்டும் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி நேற்று (26) பிற்பகல் முதல் தேசிய மின்கட்டமைப்பிற்கு 300 மெகாவாட் மின்சாரம் சேர்க்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.

முதலாவது மின்மாற்றி பழுதடைந்ததாலும், 2வது மின்மாற்றி பழுதாகி நின்றதாலும் கடந்த 15ம் திகதி முதல் தற்போது வரை தினமும் 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.