(யூ.கே. காலித்தீன்)

'இறை இல்லத்தில் பணிபுரிந்தவர்களை வாழும்போதே வாழ்த்துவோம்' எனும் தொனிப்பொருளில் கௌரவிப்பு நிகழ்வு நேற்று (26) மாளிகைக்காடு ஸாலிஹீன் ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது.


மாளிகைக்காடு ஸாலிஹீன் ஜும்ஆப் பள்ளிவாசலின் தலைவர் ஏ.அப்துல் கபூர் (ஜெமீல்) தலைமையில் ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்ற இந்நிகழ்வில், இப்பள்ளிவாசலில் சுமார் 40வருடங்களாக கதீப்பாகவும், இறை அழைப்பாளராகவும் பணிபுரிந்த பீர்முஹம்மது முஹம்மது மன்சூர் மற்றும் இதே பள்ளிவாசலில் பணியாளராகக் கடமை புரிந்த முஹம்மது காசீம் ஹனிபா ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தியும் நினைவுச்சின்னம் மற்றும் பணப்பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


இந்நிகழ்வின் போது, சாய்ந்தமருது முஹையதீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் செயலாளர் எம்.ஐ.எம். மன்சூர் மற்றும் அதனது பேஸ் இமாம் எம்.ஐ.எம். ஆதம்பாவா, ஸாலிஹீன் ஜும்ஆ பெரிய பல்லிவாசலின் நிர்வாகிகள் மற்றும் மஹல்லாவாசிகள் ஆகியோர் கலந்து கொண்டு கௌரவிக்கப்பட்டவர்களை கைலாகு கொடுத்து முஸாபாகச் செய்தனர்.
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.