திஹாரிய YMMA அமைப்பின் ஏற்பாட்டிலும் கஹட்டோவிட்ட YMMA அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பிர்தௌஸின் வேண்டுகோளின் பெயரிலும் நடைபெற்ற ஒருநாள் நடமாடும் தோல்நோய் சம்பந்தப்பட்ட மருத்துவ முகாம் திஹாரிய கிளினிக் கட்டிடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு சர்வமத தலைவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் அகில இலங்கை YMMA அனர்த்த முகாமைத்துவ வள ஒருங்கிணைப்பாளரும் மத்திய YMMA இன் Ex-Co உறுப்பினருமான அன்வர் சாதாத், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான YMMA பணிப்பாளர் நஸாரே காமில் மற்றும் திஹாரிய YMMA அமைப்பின் முன்னாள் நடப்பு வருட நிர்வாகிகளும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
கம்பஹா RDH வைத்தியசாலை வைத்தியர்கள் இந்நிகழ்வில் கலந்து மக்களின் தோல்நோய் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு இலவச மருத்துவ சேவைகள் வழங்கியதுடன் தேவையான மருந்துகளை வத்துப்பிட்டிவல வைத்தியாலையின் மருந்தகத்தினால் வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.