கொரிய வேலைக்கான விண்ணப்பதாரர்களை கூடிய விரைவில் தென் கொரியாவிற்கு அனுப்ப 1,125 விசாக்கள் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அதன்படி வாரத்திற்கு இருநூற்று ஐம்பது பணியாளர்கள் கொரியாவுக்கு அனுப்பப்படுவார்கள் என அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும்,தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு.மனுஷ நாணயக்கார தலைமையில் நேற்று (09) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் கொரிய மனிதவள திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொரிய வேலை தேடுபவர்களுக்கு வீசா விண்ணப்பிப்பதில் தாமதம் ஏற்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தணிக்கை செய்யப்பட்டு அவர்களுக்கு இலக்குகள் மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.