பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தை ஹெக் செய்த தரம் 13 மாணவன் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சந்தேகநபரை 10 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் திரு.மஞ்சுள ரத்நாயக்க நேற்று (09) உத்தரவிட்டார்.

மேலும், மற்றுமொரு பிணை நிபந்தனையாக, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை சந்தேகநபர் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு நீதவான் சந்தேக நபருக்கு உத்தரவிட்டுள்ளார். ஹப்புகலவை வசிப்பிடமாகவும், காலி ரிச்மண்ட் கல்லூரியில் கல்வி கற்கும் அசேல இந்திவர என்ற பத்தொன்பது வயதுடைய இளைஞரே நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த சந்தேகநபர் அடுத்த வருடம் உயர்தரப் பரீட்சைக்கு முகம் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும், அவர் மிகவும் திறமையான மாணவர் எனவும், தொழில்நுட்பம் கற்று வருவதாகவும் சட்டத்தரணி குறிப்பிட்டார்.

இதேபோன்ற சம்பவமாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இணையத்தளத்தை ஹேக் செய்த மாணவனுக்கு விருதுகளுடன் மன்னிப்பு வழங்கும் வகையில் இதற்கு முன் தீர்ப்பு வழங்கியதை முன்வைத்து இந்த வழக்கை பரிசீலிக்குமாறு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரினார்.

எனினும் நீதவான் சந்தேகநபரான இளைஞனை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.

பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து தகவல்களைப் பெற்று வேறு இணையத்தளத்தில் பதிவிட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம், கணினி குற்றச் சட்டம் 2007 இன் கீழ், இந்த சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த முறைப்பாடுகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சமூக ஊடகப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் காயத்திரி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.