இலங்கையில் முதலாவது தபால் அட்டை வெளியிடப்பட்டு 150 வருடங்கள் நிறைவடைந்துள்ளதனை முன்னிட்டு அதன் நினைவாக இன்று (01) தபால் திணைக்களத்தின் முத்திரை வெளியீட்டு பிரிவினால் தபால் அட்டை ஒன்று வெளியிடப்பட்டது.
1872 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முதலாவது தபால் அட்டையின் படத்துடன் குறித்த நினைவு தபாலட்டை வெளியிடப்பட்டுள்ளது.
அன்று வெளியிடப்பட்ட தபால் அட்டையின் விலை 02 சதம் என்பதுடன் தற்போது வெளியிடப்பட்டுள்ள நினைவுத் தபால் அட்டையின் விலை 20 ரூபாவாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முத்திரைகளை சேகரித்து வருபவர்களுக்கு இந்த நினைவு தபால் அட்டையுடன் Folder ஒன்றும் (மட்டுப்படுத்தப்பட்ட அளவு) வழங்கப்படும் என்று தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. - சியன நியூஸ்