இலங்கைப் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை பாடசாலை மாணவர் ஒருவர் ஹேக் செய்தமையால் 2021ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் இருந்து முடிவுத் தரவைப் பெற்று, அவற்றை தனது இணையதளத்தில் வெளியிட முயன்றுள்ளார் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் காலி பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவர் ஒருவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.