வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் நிலைகொண்டிருந்த தளம்பல் நிலையானது இலங்கையை விட்டு அப்பால் படிப்படியாக நகர்ந்து செல்கின்றது. 

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கண்டி, நுவரேலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்தின்  பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் பல இடங்களிலும்  மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.10 மணியளவில் முதுகாடு, தங்கஸ்வெவ, துந்துருப்பிட்டிய, கம்மிலேவ மற்றும் கும்முனுமுலை  போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது. 

கடல் பிராந்தியங்களில் 
****************************

காங்கேசன்துறை தொடக்கம் மன்னார், புத்தளம், கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான  கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யக்கூடும்.  

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 ‐ 40 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 

காங்கேசன்துறை தொடக்கம் புத்தளம், கொழும்பு,  காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக  பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள  கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய  வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும். 

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.