சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும்  அத்துடன் கண்டி, நுவரேலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும்.

கடல் பிராந்தியங்களில் 
****************************

புத்தளம் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி  வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் சிறிதளவு மழை  பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 35 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 

புத்தளம்  தொடக்கம் மன்னார்  ஊடாக காங்கேசன்துறை  வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான  கரையோரத்திற்கு அப்பால் உள்ள  கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 km இலும் கூடிய  வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு  கொந்தளிப்பாகக் காணப்படும். 

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.