ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் 2022 தொடரின் இறுதிப் போட்டியில் சிங்கப்பூரை 63 – 53 என தோற்கடித்த இலங்கை அணி, ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் பட்டத்தை தனதாக்கியுள்ளது.

இன்று (11) சிங்கப்பூரில் இப்போட்டி இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018 ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டியை வென்று நடப்பு சம்பியனாக உள்ள இலங்கை அணி இக்கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றியுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இத்தொடர் கடந்த 2020 இல் கொவிட் தொற்று காரணமாக இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி 1989, 1997, 2001, 2009, 2018 ஆகிய ஆண்டுகளில் சம்பியனாக தெரிவானதோடு, ஆசிய கிண்ண சம்பியன்ஷிப் தொடரை அதிக தடவை (06) வென்ற அணியாக இலங்கை வலைப்பந்து அணி தனது பெயரை பதிவு செய்துள்ளது.

இத்தொடரில் இலங்கை வலைப்பந்தாட்ட அணி இந்தியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கபூர், ஹொங்கொங் ஆகிய அனைத்து அணிகளுடனான போட்டியையும் வெற்றி பெற்று தொடரில் தோல்வியுறாத அணியாக உள்ளது.

இதேவேளை, நேற்று (10) சனிக்கிழமை இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில் 67 – 43 என ஹொங்கொங் அணியை வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவானதன் மூலம் எதிர்வரும் வருடம் தென்னாபிரிக்காவில் இடம்பெறவுள்ள வலைப்பந்து உலக சம்பியன்ஷிப் தொடரில் விளையாடவும் இலங்கை அணி தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூரை (63-53) தோற்கடித்து தொடர் முழுவதும் தோல்வியை தழுவாது ஆசிய வலைப்பந்து சம்பியன் பட்டம் வென்ற இலங்கை வலைப்பந்து அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.