22 ஆவது திருத்த சட்டமூலத்தில் அடங்கியுள்ள சில ஷரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானதாக உள்ளதென உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நாடாளுமன்றில் இன்று அறிவித்தார்.

அதனை நிறைவேற்றுவதற்கு விசேட பெரும்பான்மை அல்லது சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்று உயர் நீதிமன்றம் தமது வியாக்கியானத்தில் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த ஷரத்துகள் திருத்தப்பட்டால் பொது வாக்கெடுப்பு இல்லாமலேயே நாடாளுமன்றில் திருத்தத்தை நிறைவேற்ற முடியுமென உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.