இன்று (03) முதல் ஒரு இறாத்தல் (450 கிராம்) பாணின் விலையை 300 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
50 கிலோ கிராம் கோதுமை மாவின் விலை ரூபா 20,000 ஆக அதிகரித்துள்ளதனை தொடர்ந்து குறித்த விலை அதிகரிப்பை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ஒரு இறாத்தல் பாணின் விலை 180 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. - Siyane News