யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்த 4 நாட்களேயான சிசு தாய்ப்பால் புரையேறி மரணம்

  Fayasa Fasil
By -
0



யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்த 4 நாட்களேயான சிசு தாய்ப்பால் புரையேறி உயிரிழந்துள்ளது.

நேற்றுமுன்தினம் இரவு குழுந்தை உயிரிழந்துள்ளது. மயிலிட்டியை சேர்ந்த பெண் ஒருவர் நேற்றுமுன்தினம் 8.45 மணியளவில் தனது சிசுவுக்கு பால் கொடுத்துவிட்டு குழந்தையை பார்த்தபோது குழந்தை அசைவற்றுக் கிடந்துள்ளது.

இதனையடுத்து சிசுவை பரிசோதித்தபோது சிசு உயிரிழந்துள்ளது. பிரேத பரிசோதனையில் பால் மூச்சுக்குழாயில் புகுந்து புரக்கேறி உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சிசுவின் உயிரிழப்புத் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டிருந்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)