பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் முட்டைகளை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமைக்காக 5 இலட்சம் ரூபா அபராதம் செலுத்துமாறு பலாங்கொடை பதில் நீதிவான் உத்தரவிட்டார்.

4 வெள்ளை முட்டைகளை 260 ரூபாவுக்கு விற்பனை செய்தமைக்காகவே இந்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக முட்டை ஒன்றுக்கு 65 ரூபா வீதம் என்ற அடிப்படையில் நான்கு முட்டைகளை 260 ரூபாவுக்கு அந்த வர்த்தகர் விற்பனை செய்ததாக நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.