இன்று(09) முதல் சதொச மூலம் விற்பனை செய்யப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட 7 வகையான பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சதொசவின் தலைவர் பசந்த யாப்பா, அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பில் உள்ளதால் இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பொருட்கள்குறைக்கப்பட முன்னர் விலைகுறைக்கப்பட்ட பின்னர் விலை
வெள்ளை அரிசி195185
நாட்டரிசி198194
சிவப்பு பருப்பு460429
வெள்ளை சீனி298279
நெத்தலி13751350
வெள்ளை பூடு750595
வட்டானா பருப்பு375315
புதிதாக குறைக்கப்பட்ட விலைகள்

இதேவேளை, குறைந்த வருமானம் பெறும் பெருந்தோட்ட மக்கள் வாழும் பிரதேசங்களில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக ஒரு கிலோ கோதுமை மாவை 310 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.