இலங்கையின் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான Airtel Lanka, தேசிய மனநல சுகாதார நிறுவனத்துடன் (NIMH) இணைந்து Whatsapp மூலம் மனநல உதவி சேவைகள் தொலைபேசி இலக்கமான 1926ஐ இணைக்கும் வசதியை விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது.

இதன்மூலம் மனநல ஆரோக்கியத்திற்கான தேவை ஏற்படும் அனைவரும் இப்போது NIMHஇன் மனநல உதவி சேவைகளை 075 555 1926 என்ற WhatsApp எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

"கடந்த காலத்தில் அமுல்படுத்தப்பட்ட Lock Downகள் மற்றும் பெரும்பாலான தனிமைப்படுத்தல் ஆகியவை மனநலம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரிக்க வழிவகுத்தன.

எனவே, WhatsApp மூலமான தீர்வுகளை வழங்குதல் காலத்தின் தேவையாக இருந்தது. Chat-line மூலம் தொடர்புகொள்பவர்களில் பெரும்பாலோர், சமாளிப்பதற்குப் போராடும் இளம் வயதினர்களாகவே உள்ளனர்.

பெரும்பாலானோர், Text Message அனுப்புதல் நிச்சயமாக ஒரு சிறந்த தீர்வாகும், குறிப்பாக இளைஞர்களுக்கு, பேசுவதற்குப் பதிலாக Chat செய்வது வசதியாக இருக்கும், குறிப்பாக எங்களுடன் உரையாடல் செய்ய ஆரம்பிக்கும் போது, மேலும் அணுகலை விரிவுபடுத்துவதற்கான எங்கள் முயற்சிகளை ஆதரித்த எயார்டெல் குழுவிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்" என NIMHஇன் சிரேஷ்ட மனநல மருத்துவர் டொக்டர் புஷ்பா ரணசிங்க தெரிவித்தார்.



2020 உலக மனநல தினத்தின் போது அறிமுகப்படுத்தப்பட்ட SMS ஊடான சேவை, பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் மனநிலை காரணமாக சவால்களை எதிர்கொள்ளும் பெரும்பாலானவர்களுக்கு உதவிகளை வழங்கவும், ஆறுதல் அளிக்கவும் மற்றும் வழிநடத்துதல்களை வழங்குவதற்கு மேலதிகமாக 100க்கும் மேற்பட்ட உயிர்களை காப்பதற்கு உதவியாக உள்ளது.

“எயார்டெல் நிறுவனம் NIMHஇல் செய்து வரும் நம்பமுடியாத சேவைகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதில் பெருமிதம் கொள்கிறது, மேலும் 1926 Whatsapp சேவையின் விரிவாக்கமானது இன்னும் அதிகமான இலங்கையர்களை அணுகுவதற்கு உதவியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என எயார்டெல் ஸ்ரீலங்காவின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஷிஷ் சந்திரா கூறினார்.

Whatsapp இல் சேவையை விரிவுபடுத்துவதற்கான எயார்டெல்லின் முடிவு, Voice அல்லது குறுந்தகவலை விட Data பயன்பாட்டிற்கான விருப்பத்தைக் காட்டும் இளம் பாவனையாளர்களுக்கு நேரடியான சிறந்த முறையாக அமையும். இந்த Appஆல் வீடியோ அழைப்புகள், மருத்துவச் சீட்டுகளை பகிர்தல் மற்றும் Voice Notes உட்பட பல்வேறு தீர்வுகளை பயன்படுத்த முடியும்.

1926 சேவையின் இந்த சமீபத்திய விரிவாக்கம் மூலம், எயார்டெல் மனநலத்தைச் சுற்றி ஒரு திறந்த மற்றும் புரிந்துகொள்ளும் கலாச்சாரத்தின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறது. இது அதிக இளைஞர்களை தொழில் வல்லுநர்களிடம் அணுக ஊக்குவிக்கிறது. அவர்கள் நெருக்கடியான காலங்களை அனுபவிக்கும் போது இது மிகவும் முக்கியமானது மற்றும் பாதுகாப்பான மற்றும் இனந்தெரியாத சூழலில் அவர்களின் மனதிலுள்ள கவலைகள் குறித்த வழிகாட்டுதலின் மூலம் பயனடையலாம்.

இறுதியில், நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் அழுத்தங்களை எதிர்கொண்டாலும், அல்லது உங்களுக்கு மனநலம் தொடர்பில் ஒரு சிறிய உதவி தேவை என உணர்ந்தாலும், எளிதில் அணுகும் சேவை அனைத்து மாற்றங்களையும் ஏற்படுத்தும். இந்த புதிய அறிமுகப்படுத்தலின் மூலம் நீங்கள் அதிகப் பலன்களைப் பெறுவீர்கள் என்று நம்புகிறோம், மேலும் அதில் ஒரு பங்குதாரராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்" என அஷீஷ் மேலும் தெரிவித்தார்.

அனைத்து எயார்டெல் பாவனையாளர்களுக்கு மட்டுமன்றி அனைத்து ஏனைய தொலைத்தொடர்பு வலைப்பின்னிலுள்ள அனைவரும் அனுகக் கூடிய விதத்தில் சேவையை விஸ்தரிக்க கிடைத்தமை எயார்டெல் - NIMH 1926 WhatsApp ஒத்துழைப்பு சேவையின் குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.

1926 மனநல சுகாதார சேவை தொலைபேசி இலக்கம் மற்றும் SMS ஊடாக அனைத்து எயார்டெல் பாவனையாளர்களுக்கும் இலவசம். எயார்டெல் தமது சமூக வலைத்தளம் மற்றும் My Airtel App ஊடாக மனநல சுகாதாரம் தொடர்பில் மற்றும் அனைத்து NIMH 1926 உதவி தொலைபேசி சேவை தொடர்பில் உங்களை அறிவுறுத்த அர்ப்பணிப்புடன் உள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


நன்றி - விடியல்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.