ஜவய இளைஞர் ஊடக அமைப்பின் பிரதிநிதி முஹமட் நஸ்ரான்,இன்றைய(25) தினம்  முன்னாள் ஜனாதிபதி திருமதி.சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்தித்து,சகல தேர்தல்களிலும் 25% இளைஞர் பிரதிநிதித்துவ ஒதுக்கீட்டினை உள்ளீர்த்தல் மற்றும் நாட்டின் சமகால நெருக்கடி நிலை குறித்து கலந்துரையாடினார்.

சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி, "ஜவய இளைஞர் ஊடக அமைப்பு" 25% இளைஞர் பிரதிநிதித்துவத்தை வழங்குவது குறித்து, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்,இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகள், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளிடமிருந்து 
கருத்துக்களைப் பெற்று ஆவணமாக்கல் செயற்பாட்டில் ஈடுபட்டது.

குறித்த ஆவணமாக்கல் தொடர்பான இறுதி அறிக்கை மற்றும் பிரேரணையின் தற்போதைய நிலை குறித்த அறிக்கை இன்று முன்னாள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.