குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் பொது மக்களின் பல ஏக்கர் விவசாய நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் கடந்த வாரம் சுவீகரிக்க பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு அப்பகுதி மக்கள் எடுத்துக் கூறியதன் பிரகாரம் அப்பகுதிக்கு நேற்று (16) மாலை பாராளுமன்ற உறுப்பினர் விஜயம் செய்து தொல்பொருள் திணைக்களத்தினர் சுவீகரித்துள்ள காணிகளைப் பார்வையிட்டுள்ளார்.

இதன்போது உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சரை தொடர்பு கொண்ட சார்ள்ஸ், புதிதாக தொல்பொருள் திணைக்களத்தினர் மக்களின் விவசாய நிலங்களை சுவீகரித்துள்ளனர் எனவும், இதனால் இப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரியப்படுத்தியுள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இப்படியான செயற்பாடுகள் தொடர்ந்தும் மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் என்றும் அமைச்சருக்கு சார்ள்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.

இது தொட‌ர்பாக உடனடியாகத் தான் விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.