(அஷ்ரப் ஏ சமத்)

மன்னாரில் இருந்து கொழும்பை நோக்கி வந்த வேன் ஒன்றை (02)ஆம் திகதி நேற்று இரவு கொழும்பு ஊருகொடவத்தையில் வைத்து மறித்து பரிசோதனை மேற்கொண்டபோது சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் கிராண்பாஸ் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டன.

இவ் வேனில் ரூபா 45 இலட்சம் ருபா பெறுமதியான கஞ்சாப் பொதிகள் காணப்பட்டன. இவர் மன்னாரைச் சேர்ந்தவர் என்றும்; கஞ்சாவை கொழும்பில் எங்கு கொண்டு வந்துள்ளார். அதனை யார் வாங்குவது என்ற மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம் என கிராண்பாஸ் பொலிஸின் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஹேரத் இத் தகவலை இன்று காலை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.