கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து மலேசிய முன்னாள் பிரதமர் மஹாதிர் மொஹமட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைரஸ் இருப்பது புதன்கிழமை காலை உறுதி செய்யப்பட்டதாகவும் மருத்துவக் குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய கண்காணிப்புக்காக அடுத்த சில நாட்களுக்கு தேசிய இதய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவரது அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
97 வயதான மஹாதிர் மொஹமட் இதயப் பிரச்சினைகளால் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டுள்ளார் என்பதோடு, கடந்த ஜனவரியில் கணிசமான காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.