உயர்தரப் பரீட்சை முடிவுகள் வௌியான மாணவர்களுக்கான வாய்ப்பு

  Fayasa Fasil
By -
0


2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் மீள் பரிசோதனை விண்ணப்பங்களை நாளை (15) முதல் இணையத்தின் ஊடாக (Online) அனுப்பலாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

குறித்த விண்ணப்பங்களை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை அனுப்பி வைக்க முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்த விண்ணப்பங்கள் இணையத்தின் ஊடாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களத்தில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பங்களை அனுப்பலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)