பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயதுன்னேவினால் குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சேவை மூப்புப் பாதிக்காத வகையில் அரச ஓய்வூதியதாரர்களுக்கு உள்ளூரில் விடுமுறை வழங்குவதற்கான பரிந்துரைகள் வழங்குவதற்காக சிரேஷ்ட அலுவலர்கள் அடங்கிய குழுவொன்று, 2022 ஜூன் மாதம் 13 ஆம் திகதி அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய நியமிக்கப்பட்டது.
குறித்த குழுவால் உச்சபட்சம் 5 வருடகாலம் வரைக்கும் சம்பளமற்ற விடுமுறை வழங்குவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
கடந்த செப்டெம்பர் 05ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவையில் குறித்த அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை வருமாறு…