தம்புத்தேகம தனியார் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக கொண்டுவரப்பட்ட 223 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட முயற்சித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட வந்த இருவரும் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ராஜாங்கனை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பின்னர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர்கள் மூவரும் நேற்று (27) தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.