இலங்கையில் நடைமுறையில் உள்ள தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திர அமைப்பில் புதிய அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்படி புதிய அம்சமாக, வாகன வகைக்குள் அடங்காத அத்தியாவசிய உபகரணங்களுக்கான பதிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதனை இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையம் (ICTA) இதனை இன்று(09) அறிவித்துள்ளது.

ஜெனரேட்டர்கள், புல் வெட்டும் கருவிகள் மற்றும் பிற உபகரணங்கள் போன்ற வாகனங்கள் அல்லாத வகைகளுக்கு கியூ.ஆர் முறை மூலம் எரிபொருளை விநியோகிக்கும் திறன் இப்போது கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பதிவு செய்யும் முறைகள் தொடர்பான விபரங்கள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சினால் பொது மக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையம் அறிவித்துள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.