மே/கம்/ கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தின் அல்ஹாஜ் பஸால் ஆப்தீன் - மூன்று மாடி கட்டட திறப்பு நிகழ்வு இன்று (13) பாடசாலை வளாகத்தில், பாடசாலையின் அதிபர் மொஹமட் சர்ஜூன் தலைமையில் நடைபெற்றது.

 அல்ஹாஜ் பஸால் ஆப்தீனின் நன்கொடையில் உருவான குறித்த கட்டிடத்தொகுதியில் நூலகம், விஞ்ஞான ஆய்வுகூடம், கேட்போர் கூடம் உட்பட வகுப்பறைகள் அமைந்துள்ளமை சிறப்பம்சமாகும்.  

அத்துடன் அவரது நன்கொடையில் உருவான வலைப்பந்தாட்ட ஆடுகளமும் திறந்து வைக்கப்பட்டது.

 இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ATG gruop of companies இன் முகாமைத்துவ பணிப்பாளர் அல்ஹாஜ் பஸால் ஆப்தீன் கலந்துகொண்டார்.

 விசேட அதிதிகளாக கம்பஹா வலயக்கல்வி பணிப்பாளர் எம்.ஏ. அனுர பிரேமலால், ATGயின் திட்ட பணிப்பாளர் ஜமால் ஆப்தீன், கம்பஹா கல்வி வலய தமிழ் மொழி பாடசாலைகளுக்கான பிரதி பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.டி.எம்.தௌஸீர், அத்தனகல்ல கோட்டக்கல்வி பணிப்பாளர் கே.எல்.ஜீ.ஐ.பிரியாங்கனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

மேலும், ஊடக வட்டத்தின் தலைவர் அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர், பிரதேசத்திலுள்ள ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், பழைய மாணவிகள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் உட்பட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. - Siyane News 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.